கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே தந்தை கொலை: மகன் கைது

29th Aug 2019 10:04 AM

ADVERTISEMENT

கொல்லங்கோடு அருகே உளியால் மகன் குத்தியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த தந்தை செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
  கொல்லங்கோடு அருகேயுள்ள பாத்திமாநகர், ஆனப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). மர தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு ரமா என்ற மனைவியும் 2 மகன், 1 மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது. இரு மகன்களுக்கும்  திருமணம்  ஆகவில்லை.  இவரது மூத்த மகன் வினோத் (32) , மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி குடும்பத்தினரிடம்  தகராறு செய்து வந்தாராம்.
 இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி இரவு தாயாரிடம் வினோத் தகராறு செய்தாராம். இதனை அவரது தம்பி ராஜேஷ் மற்றும் தந்தை முருகன் இருவரும் தட்டிக் கேட்டனராம். இதில்,  ஆத்திரமடைந்த வினோத், வீட்டில் மர வேலை செய்ய பயன்படுத்தும் உளியை எடுத்து முருகனின் மார்பு பகுதியில் குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு பாறசாலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.   இது குறித்து இறந்த முருகனின் மனைவி ரமா அளித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீஸார் வழக்குப் பதிந்து, வீட்டில் பதுங்கி இருந்த வினோத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT