நாகர்கோவில் குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நீர் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
பள்ளித் தாளாளர் ந. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். இதில், நீரின் தேவை, அவசியம் பயன்படுத்தும் விதமும் மற்றும் நீரின் அளவை அதிகரிக்கப்படுத்தும் விழிப்புணர்வு அடங்கிய வாசகங்கள் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது.
சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் ச. ரதி, நீர் மேலாண்மை குறித்து எளிமையான முறையில் மாணவர்களுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர், மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.