அப்பட்டுவிளை கிராம நிர்வாக அலுவலகத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
தக்கலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் உதயதீப, வருவாய் ஆய்வாளர் ஜெனி உள்பட பலர் பங்கற்றனர்.
தக்கலை ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சூசை மரியான் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.