கன்னியாகுமரி

கிள்ளியூர் வட்டத்தில்  முதல்வரின் சிறப்பு குறைதீர் முகாம்

28th Aug 2019 07:25 AM

ADVERTISEMENT

கிள்ளியூர் வட்டத்திற்குள்பட்ட 4 கிராம நிர்வாக அலுவலகங்களில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கிள்ளியூர் வட்டத்திற்குள்பட்ட கருங்கல், ஆறுதேசம் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும், அதன் தொடர்ச்சியாக மத்திகோடு, மெதுகும்மல் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களிலும் முகாம் நடைபெற்றது.
கருங்கலில் நடைபெற்ற முகாமில் கிள்ளியூர் வட்டாட்சியர் கோலப்பன் தலைமை வகித்து முகாமை தொடங்கிவைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் குமார் முன்னிலை வகித்தார். இதில், கிள்ளியூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வில்லியம் சந்திரபோஸ், மிடாலம் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் கீதா, கருங்கல் கிராம நிர்வாக அலுவர் ராமச்சந்திரன் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த முகாமில் மக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
புதன்கிழமை (ஆக. 28) காலை 10 மணிக்கு கீழ்மிடாலம், அ. கீழ்மிடாலம் ஆ.முன்சிறை ஆகிய 3 கிராம நிர்வாக அலுவலகங்களிலும், பிற்பகல் 2 மணிமுதல் முள்ளங்கனாவிளை, அடைக்காகுழி ஆகிய 2 கிராம நிர்வாக அலுவலகங்களிலும் குறைதீர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT