மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
குமரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நாகர்கோவில் கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மகளிருக்கான போட்டியில் நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி அணி, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.
இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி செயலர் எம். எக்கர்மென்ஸ் மைக்கேல் மற்றும் கல்லூரி முதல்வர், அனைத்துத் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.