மார்த்தாண்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் திங்கள்கிழமை பார்வையிட்டனர்.
தமிழக அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக இந்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பார்வையிட்டனர்.