கன்னியாகுமரி

தக்கலையில் காமராஜ் பவுண்டேசன் ஆலோசனைக் கூட்டம்

27th Aug 2019 08:16 AM

ADVERTISEMENT

காமராஜ் பவுண்டேசன்  ஆப் இந்தியா  தக்கலை கிளை ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
 இக் கூட்டத்துக்கு,  மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் அருள்ஆனந்த்,  மத்திய கமிட்டி உறுப்பினர்கள் ஜாண்கிறிஸ்டோபர்,  பால்ராஜ்,  பத்மசீலன்,  பெர்லின்ஜோ,  மதச்சார்பற்ற  ஜனதாதள  மாவட்டச் செயலர் மணி,  அகஸ்தீசுவரம் வட்டார தலைவர் தியாகராஜன்  மற்றும்  ஜாண்பிரிட்டோ,  ஆரீஸ், தேவராஜ் , ஏசுவடியான் , ஜாண்போஸ்கோ உள்ளிட்ட பலர் பேசினர்.  
தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.  தேர்தல் அலுவலராக  ஜாண்கிறிஸ்டோபர் செயல்பட்டார். 
தலைவராக ஐ.அலெக்ஸாண்டர்,  துணைத் தலைவராக  ஆஸ்டின் செல்வராஜ்,  செயலராக ஜீவானந்தம், துணைச் செயலர்களாக  ஸ்டீபன், செல்வராஜ்,  மாநில குழு உறுப்பினர்கள்  பால்ராஜ், ஜாண்பிரிட்டோ,  சரோஜா, சரோஜினி  மற்றும் மத்திய கமிட்டி குழு உறுப்பினராக  பத்மசீலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைக்கு  காமராஜ் பெயர் சூட்டவேண்டும்.  காமராஜ் பவுண்டேசன்  சார்பில்  அக்.2 ஆம் தேதி  காந்தி ஜெயந்தி அன்று  மாலை 5 மணிக்கு  கன்னியாகுமரி விவேகானந்தா  கேந்திரா சந்திப்பில் இருந்து  ஊர்வலமாக காந்திமண்டபம்  மற்றும்  காமராஜர்  நினைவாலயத்திற்கு சென்று மரியாதை  செலுத்தும் நிகழ்வில்  பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT