கன்னியாகுமரி

மார்த்தாண்டத்தில் அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகள் பறிமுதல்

23rd Aug 2019 07:30 AM

ADVERTISEMENT

மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வந்த 14 லாரிகள் உள்ளிட்ட 16 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழி செங்கல், ஜல்லி, பாறைப்பொடி உள்ளிட்ட கனிம பொருள்கள் கேரளத்துக்கு அதிகளவில் கடத்திச் செல்லப்படுவதாக வந்த புகாரையடுத்து மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே. பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் மார்த்தாண்டம், குழித்துறை, களியக்காவிளை, தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
இதில், அதிக பாரம் ஏற்றிவந்த 14 கனரக லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அனுமதிச்சீட்டு இல்லாமலும், உரிய வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ. 35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் மார்த்தாண்டத்தில் மேற்கொண்ட வாகன
சோதனையில் தடம் மாறி இயக்கப்பட்ட ஒரு சிற்றுந்து பறிமுதல் செய்யப்பட்டது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT