கன்னியாகுமரி

மணலிக்கரை மரியகொறற்றி பள்ளியில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

23rd Aug 2019 07:33 AM

ADVERTISEMENT

மணலிக்கரை புனித மரியகொறற்றி மேல்நிலைப் பள்ளியில் கணித மன்றம் சார்பில் 3 நாள்கள் நடைபெறும் புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தக்கலை காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் கண்காட்சியை  திறந்துவைத்துப் பேசியது: அறிவு பாடப் புத்தகத்திற்கு வெளியே குவிந்து கிடக்கிறது. அதை தேடி மாணவர்கள் புறப்பட வேண்டும். பத்திரிகைகளை அன்றாடம் வாசித்து முக்கியமான செய்திகளை குறிப்பெடுத்து  வைத்துகொள்ள வேண்டும். அது எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். இதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். மனிதனின் குணத்தை மாற்றுகிற சக்தி  புத்தகத்திற்கு உண்டு. வீட்டுக்கு ஒரு நூலகம் அமைத்து அனைவரும் பயனடையலாம் என்றார்அவர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை சக்கர் மேரி டார்லிங்றோஸ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜஸ்டின் பிரான்சிஸ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஸ்ரீஐயப்பா கல்லூரி முதல்வர்  கே.வி.ஜெயஸ்ரீ வாழ்த்திப் பேசினார்.
விழாவில், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜான் இக்னேசியஸ்,   விஜயகுமார், தமிழரசி உள்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் ஜார்ஜ் நன்றி கூறினார். இந்த புத்தகக் கண்காட்சி காலை 9 மணிமுதல்  மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (ஆக. 23)  பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT