கன்னியாகுமரி

திருவட்டாறில் 30இல் தனியார் நிதி நிறுவன சொத்துகள் ஏலம்

23rd Aug 2019 07:33 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் முதலீடுகளை பெற்று திருப்பி வழங்காத தனியார் நிதி நிறுவனத்தின் சொத்துகள் ஆக. 30ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவட்டாறு  வட்டம்,  வேர்கிளம்பியில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம், பொதுமக்களின் முதலீடுகளை பெற்று திரும்ப வழங்காததையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான சுருளோடு மற்றும் மேக்கோடு (தற்போது குமரன்குடி) கிராமத்திலுள்ள அசையா சொத்துகள் வருகிற 30ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலரால்  திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பொதுஏலம் நடத்தப்பட உள்ளது. 
இந்த ஏலத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் சொத்துகளின் விவரம் ஏலத்தில் கலந்துகொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பப் படிவத்தை, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெற்று தெரிந்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT