கன்னியாகுமரி

சாமிதோப்பில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா

23rd Aug 2019 07:32 AM

ADVERTISEMENT

சாமிதோப்பு ஊராட்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   
ஊராட்சி அதிமுக செயலர் என்.பார்த்தசாரதி தலைமை வகித்தார். செட்டிவிளை கிளைச் செயலர் என்.பொன்ராஜ் வரவேற்றார். தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் கலந்துகொண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.
இதில், மாநில இலக்கிய அணி துணைச் செயலர் கவிஞர் 
டி. சதாசிவம், மாவட்ட அதிமுக துணைச் செயலர் ஏ.ராஜன், அகஸ்தீசுவரம் ஒன்றியச் செயலர் எஸ்.அழகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் ஏ.சுந்தர்சிங், ஒன்றிய இளைஞரணிச் செயலர் தங்கநாடார், பேரூர் செயலர்கள் தாமரை தினேஷ், வீரபுத்திரன், ராஜபாண்டியன், சீனிவாசன், ஊராட்சி செயலர்கள் பாலருகன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மதிவாணன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT