கன்னியாகுமரி

ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் திருவிழா நாளை தொடக்கம்

18th Aug 2019 01:35 AM

ADVERTISEMENT


களியக்காவிளை அருகே பிரசித்திபெற்ற மீனச்சல் ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் அஷ்டமங்கல தேவபிரசன்ன பரிகார பூஜை, அஷ்டமி ரோகிணி திருவிழா திங்கள்கிழமை (ஆக. 19) தொடங்கி 6 நாள்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயிலில் திருவிழா நாள்களில் தினமும் காலையில் மகா கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை, மகா சுதர்ஸன ஹோமம்,  மதியம் அன்னதானம், மாலையில் பகவதி சேவை, லலிதா சகஸ்ரநாமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.  2 ஆம் நாளன்று இரவு 7.30 மணி, 4 ஆம் நாள் இரவு 8 மணிக்கு சமயச் சொற்பொழிவு நடைபெறும். 
5 ஆம் நாளன்று ஆக. 23 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தை பருவ விளையாட்டை விவரிக்கும் சிறப்பு உறியடி நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு சிறப்பு பன்முக நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது. 6 ஆம் நாளன்று ஆக. 24 ஆம் தேதி சிறப்பு பூஜையை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT