கன்னியாகுமரி

ரேஷன் அரிசி குறைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

18th Aug 2019 01:37 AM

ADVERTISEMENT


ரேஷன் கடைகளில் அரிசி குறைத்து விநியோகம் செய்வதை கண்டித்து திருவட்டாறு அருகே  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி குறைத்து வழங்கப்படுவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவட்டாறு தாணிவிளை ரேஷன் கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் அருவிக்கரை கிளைத் தலைவர் சி.வர்க்கீஸ் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சி. வில்சன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். ரவி, எம். ஜோஸ்மனோகரன்,  சாந்தி, சாந்தகுமாரி, ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT