கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இதில், கட்சியின் வட்டாரத் தலைவர்கள் ஹெச். டென்னிஸ் (கிள்ளியூர் கிழக்கு), என்.ஏ. குமார் (கிள்ளியூர் மேற்கு), சி. மோகன்தாஸ் (மேல்புறம்), காஸ்டன் கிளிட்டஸ் (திருவட்டாறு மேற்கு), ஜெகன்ராஜ் (திருவட்டாறு கிழக்கு), பால்ராஜ் (முன்சிறை கிழக்கு) அருள்ராஜ் (குழித்துறை நகரம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், ஆக. 20 இல் ராஜீவ்காந்தியின் 75 ஆவது பிறந்ததின விழாவை பவள விழா ஆண்டாக கொண்டாடுவது; கருங்கல் பகுதியில் கருத்தரங்கு நடத்துவது; வட்டாரம், நகரம், பஞ்சாயத்து அளவில் ஆண்டு முழுவதும் நல உதவிகள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது, ரத்த தான முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.