கன்னியாகுமரி

குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பு

18th Aug 2019 01:35 AM

ADVERTISEMENT


விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்கமோதிரம் அணிவிக்கப்பட்டது.
கட்சியின் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி கிளை சார்பில் தக்கலை தலைமை அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு அக்கட்சியின் மாநில துணைச்செயலர் முருகன் தங்கமோதிரம் அணிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு, கட்சியின் தொகுதிச் செயலர் மேசியா தலைமை வகித்தார்.  நிர்வாகிகள்  ஜானதாஸ், தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நிர்வாகிகள் கிறிஸ்டோபர், சத்யதாஸ்,  நவாஸ்,  சிவகுமார்,  மணிகண்டன்,  சுரேஷ்,  மணிமாறன், அருண்,  மணிபாபு, விஜி, யேசுரெத்தினம், ஷாஜின், விபின்ராஜ்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT