கன்னியாகுமரி

குமரி மெட்ரிக் பள்ளியில்கிருஷ்ண ஜெயந்தி விழா

18th Aug 2019 01:33 AM

ADVERTISEMENT


நாகர்கோவில், கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா சனிக்கிழமை  நடைபெற்றது.
விழாவுக்கு  பள்ளித் தாளாளர்  சொக்கலிங்கம் தலைமை வகித்து, அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டும்,  என்றும் தர்மமே ஜெயிக்கும் என்ற கிருஷ்ணரின் போதனைகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார். கிருஷ்ண ஜெயந்தி விழாவை சிறப்பிக்கும் வகையில் மழலையர்களுக்கு இந்து புராண வேடங்கள் எனும் தலைப்பில் மாறுவேடப் போட்டிகள் நடத்தப்பட்டன.  இதில், பங்கேற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.  ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சந்தியா, கீதா, தேவகி ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT