அகஸ்தீசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி தொடக்க விழா நிகழ்வுக்கு பள்ளித் தலைமையாசிரியர் கிளாட்லின் செளந்தரா சென் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்தார். உதவித் தலைமையாசிரியர் குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரேவதி, ஆசிரியர்கள் நாகராஜன், சிவனேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொன் வேண்டாம்-நெல் வேண்டும் என்ற வாசகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த விவசாயக் கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட விவசாயப் பொருள்கள் இடம் பெற்றிருந்தன. பனை மரத்தில் இருந்து எத்தனை வகையான உபயோகப் பொருள்கள் கிடைக்கின்றன, பல்வேறு தானியங்களில் இருந்து கிடைக்கும் பலன்கள் குறித்தும் கண்காட்சியில் மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
கண்காட்சியை சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பள்ளி மாணவர், மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.