கன்னியாகுமரி

சுதந்திர தின விழா

16th Aug 2019 09:38 AM

ADVERTISEMENT

மரியா பொறியியல் கல்லூரியில்...
மரியா பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
மரியா கல்விக் குழுமங்களின் தலைவர் டாக்டர் ஜி. ரசல்ராஜ் தலைமை வகித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரி முதல்வர் ஒய். சுஜர் சுதந்திர தின சிறப்புரையாற்றினார்.
இதில், மரியா தொழில்நுட்பக் கல்லூரி, ஆயுர்வேத கல்லூரி, சித்த கல்லூரி, ஹோமியோபதி கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.


ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில்...
நாகர்கோவில் ரோஜாவனம் பாராமெடிக்கல் கல்லூரியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரித் தலைவர் அருள்கண்ணன் தலைமை வகித்து, தேசியக் கொடியேற்றி வைத்து பேசியது: மாணவர்கள் நாட்டின் மீது  பற்று கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் உறுதுணையாக விளங்க வேண்டும். கல்வியுடன் சமுதாயப் பணியை சேவையாக கருதி செய்ய வேண்டும் என்றார் அவர். 
கல்லூரி முதல்வர் லியாகத்அலி முன்னிலை வகித்தார். நிர்வாக  அலுவலர் நடராஜன் வரவேற்றார். கன்னியாகுமரி மாவட்ட திருவருட்பேரவை அகஸ்தீசுவரம் ஒன்றிய கிளை  பொறுப்பாளர் பேராசிரியர் கஸ்தூரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் அருணாச்சலம், ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா வயலட் ராணி ஆகியோர் பேசினர். 
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், நல்லொழுக்கத்திற்கான சிறந்த மாணவர்கள், சிறந்த பேராசிரியர்களுக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
விழாவில், கல்லூரி திட்டக் குழு உறுப்பினர்கள் சில்வெஸ்டர், சேது, பேராசிரியர்கள் அய்யப்பன், துரைராஜ்,  சிவதாணு பிள்ளை, மரியஜான், பகவதிபெருமாள், சாம் ஜெபா, லிட்வின் லூசியா, கார்த்திக், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் செல்வ சிபியா, பரமேஸ்வரி, செல்லம்மாள், கண்காணிப்பாளர் மோசஸ், அலுவலக செயலர் சுஜின், முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


மார்த்தாண்டம், களியக்காவிளை பகுதிகளில்...
மார்த்தாண்டம், களியக்காவிளை சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் தலைவர் எஸ். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
நிகழ்ச்சியில், வட்டாரத் தலைவர்கள் பால்ராஜ், கிறிஸ்டோபர், சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் செல்வகுமார், குழித்துறை நகரத் தலைவர் அருள்ராஜ், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் லைலா ரவிசங்கர், மனித உரிமைத்துறை பிரிவு தலைவர் இ.ஜி. ரவிசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மார்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளி முதல்வர் எம். ஸ்ரீகுமார் தலைமை வகித்தார். மாணவி எஸ். குஷ்பு வரவேற்றார். பள்ளி முன்னாள் மாணவர் சேகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். மாணவி தனுஷ்யா நன்றி கூறினார். இதில், பெற்றோர்-ஆசிரியர் சங்க கெளரவத் தலைவர் பி. பாலசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
களியக்காவிளையில் திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். களியக்காவிளை பேரூர் அவைத் தலைவர் ஜெயராஜ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை துணைத் தலைவர் ஷாஜகான், கட்சி நிர்வாகிகள் தோமசிங், கிங்ஸ்லி, அன்வர், யுவராஜ், ஷாஜி, சுஜின் உள்பட பலர் கலந்துகொண்டனர். களியக்காவிளைஅருகே செம்மான்விளை இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தலைவர் ஜோய் ஞானசிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆலோசகர் குழிவிளை விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவில், அமைப்பின் தலைவர் ஜோய் ஞானசிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆலோசகர் குழிவிளை விஜயகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் பள்ளியில்...
திருவிதாங்கோடு அருகே ஆலங்கோடு சிஎஸ்ஐ மாற்றுத் திறனாளிகள் பள்ளி மற்றும் இல்லத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளித் தாளாளர் பேராசிரியர் சி. எட்வர்ட் ஜெயசிங் தலைமை வகித்தார். அமெரிக்கன் சொசைட்டி சிவில் என்ஜினியர்கள் சங்க தென்னிந்திய மண்டலச் செயலர் எஸ். பேசில் ஞானப்பா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அப்துல் கலாம் உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

குமரி மெட்ரிக் பள்ளியில்...
நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் ந.சொக்கலிங்கம் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்து, மாணவர், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவி பிரியங்கா வரவேற்றார். மாணவி கிருஷ்ண வீணா சுதந்திர தின சிறப்புகள் குறித்து பேசினார்.
கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனை புரிந்த, மாணவர், மாணவிகள் முகேஷ், பிரமு அக்ஷயா, அஸ்வத்,  ஜெயசூர்யா, ஜெயந்த்,  ஹரி ராம், ஹர்ஷ வர்தினி ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
மாணவிகள் வர்ஷா ஸ்ரீ, தஸ்நீம், நீல ரத்னம், ஜெனிபா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் ஓவியம், கராத்தே, யோகா, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களை பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவி பூஜா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுகு, மாதவி, ராஜலட்சுமி ஆகியோர்  செய்திருந்தனர்.

ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளியில்...
ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளிச் செயலர் வழக்குரைஞர் எஸ். கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி பிரிகேடியர் இஸ்ரேல் அருமை ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பேசினார். மாணவர், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு ஆகியவை நடைபெற்றன.
இதில், பள்ளி முதல்வர் டி.எஸ். பிரசோப் மாதவன், துணை முதல்வர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT