கன்னியாகுமரி

குமரி அருகே மீன் வலைக்கு மர்ம நபர்கள் தீவைப்பு

16th Aug 2019 09:36 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அருகே மீனவர்களின் வலைகளுக்கு தீவைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
கீழமணக்குடி மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் லாட்சன் (38), ரூபன் (40), மோகன்ராஜ் (30). இவர்கள் புதன்கிழமை மீன்பிடித்துவிட்டு, கீழமணக்குடி ஓய்வுக்கூடத்தில் எச்சவலை,  கல் இரால் வலை, வாவல் வலை, கணவாய் வலை, ஒத்தகுண்டு வலை ஆகிய 5 விதமான வலைகளை உலரப் போட்டிருந்தனர். வியாழக்கிழமை காலை ஓய்வுக்கூடத்திலிருந்து புகை வந்தது.
தகவலின்பேரில், கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்கள் வந்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து தென்தாமரைக்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். எரிந்துபோன வலைகளின் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT