கன்னியாகுமரி

குமரியிலிருந்து காஷ்மீருக்கு பைக்கில் சென்னை ஆசிரியை பயணம்

16th Aug 2019 09:49 AM

ADVERTISEMENT

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை கன்னியாகுமரிலிருந்து காஷ்மீருக்கு இருசக்கர வாகனப் பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினார். 
 முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இப்பயணத்தை தொடங்கிவைத்து  பேசியது: சிறப்பு அந்தஸ்து மூலம், கடந்த 72 ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதற்கு பிரதமர் மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது இந்நடவடிக்கையை இந்தியா மட்டுமன்றி உலக நாடுகளே வியந்து பார்க்கின்றன. பிரதமரின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து, சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ராஜலட்சுமி முண்டா (45), கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, பல்வேறு மாநிலங்கள் வழியாக 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு இருசக்கர வாகனப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ஏற்கெனவே இதுபோன்று 7 முறை 35 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்துள்ளார். அவரது முயற்சி வெற்றிபெற பாராட்டுகள்.காஷ்மீர் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துகள் ஏற்புடையவை.
தமிழக அரசியல் கட்சிகள், காஷ்மீர் விவகாரத்தை அரசியல் ரீதியில் பார்க்கக்கூடாது. அம்மாநில மக்களின் நீண்ட கால உரிமைகள் மீட்கப்பட்டன என்ற கோணத்தில்தான் அணுக வேண்டும் என்றார் அவர். இதில், மாவட்ட பாஜக தலைவர் முத்துக்கிருஷ்ணன், நாகர்கோவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் மீனாதேவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT