கன்னியாகுமரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரக் குழுக் கூட்டம்

11th Aug 2019 01:12 AM

ADVERTISEMENT


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிள்ளியூர் வட்டாரக் குழுக் கூட்டம் கருங்கல்லில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, வட்டாரக் குழு உறுப்பினர் எபிலைசியஸ் ஜோயல் தலைமை வகித்தார். வட்டாரச் செயலர் சாந்தகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலர் செல்லசுவாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், தங்கமோகன் உள்ளிட்டோர் பேசினர். கருங்கல் பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும், சுற்று வட்டாரப் பகுதிகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுவதை தடுப்பதுடன், போதை தடுப்பு காவல் பிரிவு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், வட்டாரக் குழு உறுப்பினர்கள் ராஜா, ஜோஸ் ஜவஹர், கிருசாந்துமேரி, ரசல்ஆனந்தராஜ், லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT