கன்னியாகுமரி

சங்கரன்கோவில்: பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா

11th Aug 2019 01:09 AM

ADVERTISEMENT


சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித் தவசுத் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா நடைபெற்றது.
கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமி-அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 7ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு கோமதி அம்பாள் பூப்பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா வந்தார். 
முன்னதாக, மண்டகப்படிக்கு வந்த அம்பாளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. பின்னர், நள்ளிரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் அம்பாள் வீதியுலா வந்தார். ஆயிரக்கணக்கானோர் ரதவீதிகளில் நின்று அம்பாளைத் தரிசித்தனர்.
8ஆம் நாளான சனிக்கிழமை காலை கோமதி அம்பாள் வீணா கானம் செய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 
பின்னர், ஆதிபரம்பரை மருத்துவர் சமுதாய மண்டகப்படிக்கு அம்பாள் எழுந்தருளினார். அங்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
9ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 11) கோமதி அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT