கன்னியாகுமரி

குமரி விவேகானந்த கேந்திரத்தில் மருத்துவ முகாம்

11th Aug 2019 01:10 AM

ADVERTISEMENT


கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகிலை சர்க்கரை நோயாளிகள் நலவாழ்வு அமைப்பு, விவேகானந்த கேந்திரம், நாகர்கோவில் வசந்தம் ஹெல்த் சென்டர் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின. முகாம் தொடக்க விழாவுக்கு முகிலை சர்க்கரை நோயாளிகள் நலவாழ்வு அமைப்புத் தலைவர் பி. தங்கசாமி தலைமை வகித்தார். 
பொதுச்செயலர் எம். மதுசூதனபெருமாள், இணைச் செயலர் கே. முத்துராமலிங்கம், பொருளாளர் எம். சிவபாலகிருஷ்ணன், சமூக ஆர்வலர் கே. ஐஸ்வர் கலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் முகாமைத் தொடக்கிவைத்தார்.  மருத்துவர்கள் ஆர். எஸ். ஆனந்தி, எஸ். ரதீஸ், வி. வி. சுஜித், டி. டேனியல் தேவசுதன், ஜே. மோனிஷா, ரமேஷ்குமார், என். பி. வெங்கட்ராமன், அஜிதா சேகர், பி. தனலட்சுமி, எம். எஸ். அகிலேஷ், வி. முத்தமிழ் சிலம்பு, ஏ. எம். அரசு, காவல்கிணறு ராஜாஸ் பல் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தனர். இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT