கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் நாளை பக்ரீத் பண்டிகை: மாவட்ட தலைமை ஹாஜி அறிவிப்பு

11th Aug 2019 01:13 AM

ADVERTISEMENT


கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை (ஆக. 12) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என, மாவட்ட உலமா சபையும், ஜமாஅத் கூட்டமைப்பும் அறிவித்துள்ளதாக,  மாவட்ட அரசு ஹாஜி அபூசாலிக்  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தின் அதிகமான பகுதிகளிலும், கேரளத்திலும் துல்ஹஜ் மாத முதல் பிறை கடந்த 2ஆம் தேதி தென்பட்டதாலும், 3ஆம் தேதி முதல் துல்ஹஜ் பிறை தொடங்கியது என்றும், அதனால் திங்கள்கிழமை (ஆக. 12) பக்ரீத் பண்டிகை என்றும் மாவட்ட உலமா சபையும்,  மாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பும் அறிவித்துள்ளன.
எனவே, திங்கள்கிழமை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும். சகோதர சமுதாய மக்களுடன் ஒற்றுமையுடனும், மத நல்லிணக்கத்துடனும் இணைந்து வாழ இப்பண்டிகையின்போது இறைவனிடம்  பிரார்த்திப்போம் என்றார் அவர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT