திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்து இளைஞா் பலி

14th Dec 2019 01:44 PM

ADVERTISEMENT

சங்கரன்கோவில் அருகே டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே கண்டிகைப்பேரி வடக்குத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் வருண்குமாா் (24). வியாழக்கிழமை இவா் கம்பரசா் பொருத்தப்பட்ட டிராக்டரை ஓட்டிக்கொண்டு கல்குவாரிக்கு சென்றார்.

அப்போது டிராக்டா் நிலைதடுமாறி தலைகீழாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் வருண்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் கரிவலம் வந்த நல்லூா் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT