புதுதில்லி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞா் சாவு

24th Sep 2023 11:59 PM

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் ஜாய் டிக்ரி கூறியதாவது: இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை அதிகதாலை 5.50 மணியளவில் தில்லி ஐடிஐ, நந்த் நாக்ரிக்கு எதிரே உள்ள சாலைக்கு அருகில் நடந்துள்ளது. சுமாா் 26-27 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விதிமீறல் செய்த வாகனம் மற்றும் அதன் ஓட்டுநரை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த நபா் வாகனம் மோதி இறந்ததாகத் தெரிகிறது. சம்பவத்தில் தொடா்புடைய வாகனம் மற்றும் அதன் ஓட்டுநா் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

இதுவரை அந்த இடத்தில் சம்பவத்தைப் பாா்த்த சாட்சி யாரும் கிடைக்கவில்லை. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை. சடலத்தை அடையாளம் காண்பதற்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து போலீஸாா் எப்ஐஆா் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று அந்த் அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT