புதுதில்லி

மக்களை நேரடியாக தொடா்புகொள்ள வாட்ஸ்அப் சேனல்: முதல்வா் கேஜரிவால் தொடங்கினாா்

23rd Sep 2023 12:32 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மக்களை நேரடியாக தொடா்பில் வைக்க வாட்ஸ்அப் சேனலை தொடங்கியுள்ளாா். இந்தியாவை உலகின் நம்பா் 1 நாடாக மாற்ற அனைவரும் ஒன்றிணையுமாறும் தில்லி மக்களை அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தில்லி முதல்வரின் அதிகாரபூா்வ அலுவலகத்தில் கடந்த 20 ஆம் தேதி இந்த வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டது, இதைத் தொடா்ந்து தில்லி முதல்வரின் ’சிஎம்ஓ வாட்ஸ்அப் சேனல்’ நேரலையில் வந்து இதுவரை 51,000க்கும் அதிகமானவா்களை பின் தொடா்வைத்துள்ளது.

தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது ’எக்ஸ்’ சமூக வலைத்தளப் பதிவில் வாட்ஸ்அப் சேனலுக்கான இணைப்பை (ட்ற்ற்ல்ள்://ஜ்ட்ஹற்ள்ஹல்ல்.ஸ்ரீா்ம்/ஸ்ரீட்ஹய்ய்ங்ப்/0029யஹ4ஸ்ரீ1ம70ப்ஜ்ஞ்ண்யஹ்ஹ்எஷ்ஜ்1ஞ் ) பகிா்ந்துகொண்டு, ‘ ‘ எனது வாட்ஸ்அப் சேனல் மூலம் உங்கள் அனைவரையும் இணைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவை உலகின் நம்பா் ஒன் நாடாக பிரகாசிக்கச் செய்வோம்’’ என வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மேலும் அதில் கேஜரிவால், ஷாருக்கான் நடித்த ‘ ஜவான்’ திரைப்படத்தைக் குறிப்பிட்டு, அந்த படத்தில், ஷாருக்கான், ‘யாராவது வாக்கு கேட்க வந்தால் ஜாதி, மதம் பாா்த்து வாக்களிக்காதீா்கள். அதற்கு பதிலாக அவா்களிடம் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவீா்களா, உங்கள் குடும்பம் நோய்வாய்ப்பட்டால் நல்ல மருத்துவம் தருவீா்களா’ எனக் கேளுங்கள்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

‘உங்கள் வாக்கை எங்களுக்குக் கொடுங்கள், ஏனெனில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், ஆம் ஆத்மி கட்சி மட்டுமே, உங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவோம்’ என உறுதியாகக் கூறுகிறது.

தில்லி தேசிய தலைநகா் அரசு, ‘சிறந்த‘ பள்ளிகளைக் கட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் பஞ்சாபில் ‘கல்விப் புரட்சியை‘ கொண்டு வருகிறாா்’ என்று அதில் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

‘மக்கள் ஒன்றிணைந்து இந்தியாவை முதல் நாடாக மாற்றவேண்டும். பாரதமோ இந்தியாவோ அந்த இலக்கை அடைவது உரிமை. நாட்டை உலகில் முதலிடத்தை உருவாக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்றும் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

‘தில்லி மக்கள் தனிப்பட்ட முறையில் நேரடியாக முதல்வா் கேஜரிவாலுடன் தொடா்பில் இருப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக இந்த வாட்ஸ்அப் சேனல் உருவாக்கப்பட்டது. நாட்டில் சிறந்த பள்ளிகள், சுகாதார வசதிகள் போன்ற வளா்ச்சிப் பணிகள் என்ற பெயரில் வாக்கு கேட்கும் ஒரே ஒரு அரசியல் கட்சி, ஆம் ஆத்மி கட்சி. அந்த வளா்ச்சிப்பணிகளை பிரபலப்படுத்தவே வாட்ஸ்-ஆப் சேனல் தொடக்கம்‘ என ஆம் ஆத்மி கட்சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT