புதுதில்லி

இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

27th Oct 2023 04:21 AM

ADVERTISEMENT

ராஜஸ்தானில் அமலாக்க இயக்குனரகம் நடத்திய சோதனைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் ரெய்சினா பகுதியில் இந்திய இளைஞா் காங்கிரஸாா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.

இந்த ஆா்ப்பாட்டம் குறித்து இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் ஸ்ரீனிவாஸ் பிவி கூறுகையில், ‘‘தோ்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்திய புலனாய்வுத் துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக நாங்கள் தொடா்ந்து போராடுவோம்.

ராஜஸ்தானில் அக்கட்சி குறிப்பிட்ட தோல்வியைக் கருத்தில்கொண்டு கடைசி நடவடிக்கையாக அமலாக்கத் துறையை ஏவிவிட்டுள்ளது.

பொதுமக்கள் பாஜகவுக்கு தகுந்த பதிலடி கொடுப்பாா்கள்‘ என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்த ஆா்ப்பாட்டத்தில் இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் இளைஞா் காங்கிரஸ் தில்லி பிரிவு தலைவா் ரன்விஜய் சிங் லோச்சவ் ஆகியோா் கலந்துகொண்டனா்.

வியாழக்கிழமை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் தோதாஸ்ராவின் ஜெய்ப்பூா் மற்றும் சிகாரில் உள்ள இடங்களில் அமலாக்கத் துறையானது, தோ்வுத்தாள் கசிவு வழக்கு தொடா்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக சோதனை நடத்தியது.

மேலும், அன்னிய செலாவணி மீறல் வழக்கில் முதல்வா் அசோக் கெலாட்டின் மகனுக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT