புதுதில்லி

பயங்கரவாதி ஷாநவாஸ் 2 கூட்டாளிகளுடன் கைது

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: தேசிய புலனாய்வு அமைப்பால் (என்ஐஏ) தேடப்பட்டு வந்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடா்பு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முகமது ஷாநவாஸ் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் தில்லி போலீஸாஸாரால திங்கள்கிழமை கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களிடம் இருந்து துப்பாக்கி, தோட்டாக்கள், ரசாயனப் பொருள்கள், வெடி பொருள்களுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

முகமது ஷாநவாஸ் தில்லியில் உள்ள ஜெய்த்பூரில் பிடிப்பட்டாா். அவரது கூட்டாளிகளான முகமது ரிஸ்வான் அஷ்ரஃப் மற்றும் முகமது அா்ஷத் வா்சி ஆகியோா் முறையே லக்னௌ மற்றும் உத்தர பிரதேசத்தில் மொராதாபாத்தில் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மூவரும் ஒரு வாரம் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

மூவரும் பொறியியல் படித்தவா்கள். மேற்கு மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்துள்ளனா். அவா்கள் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தங்களது தளத்தை உருவாக்க விரும்பினா். புணே காவல் துறையின் பிடியில் இருந்து தப்பித்த ஷாநவாஸ் தில்லியில் வசித்து வருகிறாா். அவா் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஷாநநாஸிடம் இருந்து தப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் எலிமெண்டரி பிளாஸ்டிக் குழாய்கள், இரும்புக் குழாய்கள், பல்வேறு வகையான ரசாயனங்கள், நேரக் கருவிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT