புதுதில்லி

மெஹ்ரௌலியில் பெண் காவலா் தற்கொலை

3rd Oct 2023 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: தெற்கு தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள தனது வாடகைக் குடியிருப்பில் தில்லி காவல் துறையைச் சோ்ந்த 26 வயது பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து திங்கள்கிழமை காலை போலீஸில் புகாா் செய்யப்பட்டது. கிஷன்கா் காவல் நிலையத்தில் காவலராகப் பணியமா்த்தப்பட்ட மிசோரத்தைச் சோ்ந்த அவா், மெஹ்ரௌலி பகுதியில் உள்ள தனது வாடகைக் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டது கண்டறியப்பட்டது. அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

அவரது உடலை போலீஸாா் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை தொடரந்து நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT