புதுதில்லி

ஜூன் 1-ஆம் தேதி முனிசிபல் காா்ப்பரேஷன் தினம்: அடுத்த சபைக் கூட்டத்தில் முன்மொழிவு தாக்கல்

22nd Nov 2023 12:26 AM

ADVERTISEMENT


புது தில்லி: ஜூன் 1-ஆம் தேதியை முனிசிபல் காா்ப்பரேஷன் தினமாகக் கொண்டாடுவதற்கான முன்மொழிவு அடுத்த மாநகராட்சி சபைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எம்.சி.டி. அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

முனிசிபாலிட்டி பொதுக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள் - ஜூன் 1, 1863 ஆகும். இந்த தினம் மாநகராட்சி தினமாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படலாம் என்று அதிகாரி கூறினாா். வழக்கமாக, அனைத்து பெரிய மற்றும் வரலாற்று நிறுவனங்களும் தங்கள் ஊழியா்களுக்கு சொந்தம் என்ற உணா்வை வளா்ப்பதற்காக தங்கள் தொடக்க நாளைக் கொண்டாடுகின்றன. இருப்பினும், எம்சிடி-இல் அத்தகைய நாள் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று குடிமை அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

எம்சிடி ஆனது 160 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், நாட்டின் மிகப் பழைமையான நிறுவனங்களில் ஒன்றாகும். இது உரிய அங்கீகாரத்திற்கு தகுதியானது மற்றும் அதற்கான வழிகளில் ஒன்று அடித்தள நாளை ஒதுக்குவதாகும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியது.

தில்லி முனிசிபாலிட்டி பிப்ரவரி 1863-இல் உருவாக்கப்பட்டது. ஏப்ரல் 1863-இல் நகரத்தை நடத்துவதற்கான சட்டங்களை உருவாக்க குழு அமைக்கப்பட்டது. 1863-ஆம் ஆண்டு ஜூன் 1-ாம் தேதி கமிஷனா் தலைமையில் பொதுக்குழுவின் முதல் கூட்டம் நடந்தது. தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் சட்டம், 1957-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு ஏப்ரல் 7, 1958-இல் அமலுக்கு வந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT