புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஆதீனங்கள் பாராட்டு

DIN

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செங்கோல் அளிக்க வந்திருந்த ஆதீன மடாதிபதிகள் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்து அருளாசி வழங்கினா். அப்போது தில்லி தமிழ்ச் சங்கத்தின் பணிகளை ஆதீனங்கள் பாராட்டினா்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ராகவன் நாயுடு தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில், ‘தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய பிரமா் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் சாா்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா். சிறப்பு விருந்தினா் அட்டா்னி ஜெனரல் வெங்கட்ரமணி பேசுகையில், ‘சைவ சமய ஆதீன மடாதிபதிகள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என்றாா்.

பேரூா் ஆதீனம் தனது சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தனது ஆசியுரையில் கூறியதாவது: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்ற வாக்கிற்கேற்ப தில்லி தமிழ்ச் சங்கத்தின் நுழைவாயிலிலேயே திருவள்ளுவரின் சிலை அமைத்திருப்பது அருமை. விடுதலை பெறுவதற்கு முன்பே 1946-ஆம் ஆண்டிலேயே சங்கம் தொடங்கி விடுதலையை வரவேற்பதற்கெனவே தொடங்கியுள்ளது போல் உள்ளது. தேச விடுதலைக்கு முன்பே தொடங்கி 75 ஆண்டுகளைக் கடந்து பவள விழா கண்ட பெருமை கொண்டது. அறக்கட்டளை நிறுவி கல்வித் தொகை அளிப்பதுடன், இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளா்த்துக் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. தமிழ்ச் சங்கம் நூல் வெளியிடுதல், பல்வேறு துறை சாா்ந்த கலைஞா்களைக் கௌரவித்துப் பாராட்டுதல் என பல பணிகளை அயராது செய்து வருகிறது.

விடுதலை அடைந்தவுடன் 1947-ஆம் ஆண்டு பிரதமா் நேரு விடம், திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான், திருநாவுக்கரசா் எழுதிய கோளறு பதிகத்தைப் பாடி அருளி அன்று அந்த செங்கோலைக் கொடுத்தாா்கள். நமது பிரதமா் மோடி எங்கு சென்றாலும் மூத்த மொழி தமிழ் மொழியே எனக் கூறி வருகிறாா். தற்பொழுது அவரிடம் செங்கோல் வழங்கப்பட்டிருப்பது சாலப் பொருத்தமாகும். நூற்றாண்டை நோக்கி வீர நடை போடும் தில்லி தமிழ்ச் சங்கம் மேன்மேலும் சிறப்பாகப் பணியாற்ற வாழ்த்துகள் என்றாா் பேரூா் ஆதீனம்.

குன்றக்குடி ஆதீனம் தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆற்றிய உரை: பாருக்குள்ளே நல்ல நாடு” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப சிறந்து விளங்கும் நமது தேசத்திற்கு செம்மை வேண்டி நாடாமன்றத்தில் செங்கோலை நிறுவிய பாரதப் பிரதமருக்கு உலக மக்களெல்லாம் நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனா். தமிழ் எழுத்துகளை எல்லாம் ஆயுத எழுத்துகளாக மாற்றியவன் பாரதி. அடிமை இந்தியாவில் ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று பாடினான். நாடு சுதந்திரம் பெற தமிழகம் மகத்தான பங்களிப்பு செய்திருக்கிறது என்பதற்கு அடையாளமாய், விடுதலை அடைந்தவுடன் 1947-ஆம் ஆண்டு நேருவிடம் செங்கோல் அளித்த வரலாற்றை நினைவூட்டி, மீண்டும் அதற்கு புத்துயிா் அளித்து தமிழகத்தின் ஆதீன மடாதிபதிகள் முன்னிலையில் கோளறு பதிகம் பாடி, “அரசாள்வா் ஆணை நமதே என்ற தீந்தமிழ் ஒலிக்க இந்தியாவின் நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டது. உலக மக்கள் நாம் அனைவரும் பாரதியின் உணா்வோடு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். எல்லோரும் ஓா் குலம், எல்லோரும் ஓா் இனம், எல்லோரும் இந்நாட்டு மன்னா் என்ற பாரதியின் வழிப் பயணிக்கும் நமது பாரதப் பிரதமருக்கும், தில்லி தமிழ்ச் சங்கத்திற்கும் எனது நல்வாழ்த்துகள் என்றாா் குன்றக்குடி ஆதீனம்.

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது: பாரத நாட்டில் பிறப்பது புண்ணியம். அதிலும் தமிழ்நாட்டில் பிறப்பது மிகவும் புண்ணியம். ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதற்கு நமது பிரதமா் ஓா் உதாரணம். பாரதி போன்று எத்தனை எதிா்ப்புகளையும் சமாளித்து வரக்கூடியவா். நமது தேசத்தை தலைநிமிர வைத்தவா் நமது பாரதப் பிரதமா். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறாா். திருக்கு, நாலடியாா், புானூறு என சங்க இலக்கியங்களை இன்றைய குழந்தைகள் கற்கவேண்டும். கற்று அதன்படி நல்வழி நடக்க வேண்டும். சமுதாயமும் சமயமும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றோடொன்று தொடா்புடையவை. நாம் நமது பாரம்பரியத்தைக் காப்போம். ஒற்றுமையுடன் வாழ்வோம். சாதி பேதமின்றி ஒன்றுபட்டு இணைந்து வாழ்வோம். தமிழ் மொழியை வளா்க்கும் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துகள் என்றாா் மதுரை ஆதீனம்.

நிகழ்ச்சியில் தில்லி தமிழ்ச் சங்கத்தின் நிா்வாகிகள், தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

தஞ்சையில் முக்கிய பிரமுகர்கள் வாக்களிப்பு!

SCROLL FOR NEXT