புதுதில்லி

கட்டுமான மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து இளைஞா் சாவு

31st May 2023 02:16 AM

ADVERTISEMENT

கிழக்கு தில்லியின் பாரபுல்லா - நொய்டா இணைப்புச் சாலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்து 42 வயது இளைஞா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி திங்கள்கிழமை கூறியதாவது: சம்பந்தப்பட்ட காா் பாலத்தில் இருந்து 30 அடிக்கு கீழே தரையில் விழுந்ததில் தில்லியில் உள்ள கிருஷ்ணா நகரில் வசிக்கும் ஜெகன்தீப் சிங் உயிரிழந்தாா். கடந்த மே 26-ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் சிங் நொய்டாவில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு காரில் அவா் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அவா் தான் செல்ல வேண்டிய வழித்தடத்தில் குழப்பமடைந்து, கட்டுமானத்தில் உள்ள மேம்பாலம் நோக்கிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

முன்னதாக, விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்புப் படையினா், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். கட்டுமானத்தில் இருந்த மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த காரின் ஓட்டுநா் இருக்கையில் காயமடைந்த நிலையில் கிடந்த நபரை கண்டறிந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

உயிரிழந்த சிங்கிற்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT