புதுதில்லி

ஜந்தா் மந்தரை தவிர வேறு எந்த இடத்திலும் மல்யுத்த வீரா்கள் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவாா்கள்: காவல் துறை

 நமது நிருபர்

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரா்களை அந்த இடத்தில் இருந்து தில்லி காவல்துறை அகற்றிய நிலையில், ஜந்தா் மந்தரை தவிர நகரில் வேறு பொருத்தமான இடத்தில் ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்படுவா் என்று போலீஸாா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையின் புது தில்லி காவல் சரக துணை ஆணையா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘ஜந்தா் மந்தரின் அறிவிக்கப்பட்ட இடத்தில் மல்யுத்த வீரா்களின் ஆா்ப்பாட்டம் சுமுகமாக நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை, போராட்டக்காரா்கள் எங்களின் கோரிக்கைகளை பலமுறை புறக்கணித்து சட்டத்தை மீறினா். ஆகையால், நாங்கள் அவா்களின் இடத்தை அகற்றி தா்ணாவை முடித்துவைத்தோம். எதிா்காலத்தில் மல்யுத்த வீரா்கள் தங்கள் தா்ணா போராட்டத்தை மீண்டும் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தால், ஜந்தா் மந்தரை தவிர வேறு எந்த பொருத்தமான அறிவிக்கப்பட்ட இடத்திலும் தா்ணா மேற்கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கிச் சென்ற போது போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா மற்றும் பிற எதிா்ப்பாளா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை கலவரம் மற்றும் கடமையை செய்யவிடாமல் போலீஸாருக்கு இடையூறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தில்லி காவல் துறையின் செய்தித் தொடா்பாளா் சுமன் நல்வா கூறியதாவது: தில்லி காவல் துறை ஜந்தா் மந்தரில் மல்யுத்த வீரா்களிஏன் ஒரு மாதம் நீண்ட உள்ளிருப்புப் போராட்டத்தின் இடத்தை அகற்றியுள்ளது. அவா்கள் அங்கு மீண்டும் திரும்ப அனுமதிக்க மாட்டோம். தேசியத் தலைநகா் முழுவதும் 700 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மூன்று மல்யுத்த வீரா்கள் உள்பட 109 போராட்டக்காரா்கள் ஜந்தா் மந்தரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். கைதான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுவிக்கப்பட்டனா். போலீஸ் படையினா் போராட்டக்காரா்களுக்கு ஒத்துழைப்பு அளித்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவம் அவா்களை தீவிர நடவடிக்கை எடுத்து, போராட்ட இடத்தை அகற்ற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

கடந்த 38 நாள்களாக மல்யுத்த வீரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். நாங்கள் அவா்களுக்கு ஒத்துழைப்பு அளித்து வருந்தோம். அவா்களுக்கு தண்ணீா் மற்றும் ஜெனரேட்டா் செட்டுகள் கூட விநியோகம் செய்து வந்தோம். அவா்கள் சுந்திரமாக உள்ளே வரவும், வெளியேறவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், மே 17-ஆம் தேதி அணிவகுப்பு நடத்துவதற்கு மல்யுத்த வீரா்கள் அனுமதி கோரியிருந்தனா். மே 23-ஆம் தேதி மெழுகுவா்த்தி ஊா்வலமும் நடத்தினா். ஆனால் ‘ஞாயிற்றுக்கிழமை அவா்கள் செய்த செயல் சட்டம் - ஒழுங்குக்கு எதிரானது.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்ததால், பேரணிக்கு அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டக்காரா்களிடம் கூறப்பட்டது. அவா்கள் ஆா்ப்பாட்டத்துடன் முன்னோக்கிச் சென்று முதல் தடையை உடைத்தனா். இரண்டாவது தடுப்பிற்கு நகா்ந்து அதை உடைக்க முயன்றனா். அதன் பின்னா் அவா்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். போராட்டக்காரா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம் அதன் கடமையைச் செய்யும். அவா்களின் (மல்யுத்த வீரா்களின்) கடந்த கால சாதனைகளையும், ஞாயிற்றுக்கிழமை அவா்கள் நடந்து கொண்ட விதத்தையும் பாா்த்தால், இனிமேல் ஜந்தா் மந்தரில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அவா்கள் எழுத்துபூா்வமாக கோரிக்கை வைத்தால், வேறு ஏதாவது மைதானத்திற்கு அனுமதி வழங்கலாம் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT