புதுதில்லி

திகாரி சிறையில் கைதிகளால் தாக்கப்பட்ட விசாரணைக் கைதி

30th May 2023 04:47 AM

ADVERTISEMENT

தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி, திங்கள்கிழமையன்று மற்ற கைதிகளால் கத்தி மற்றும் கையால் செய்யப்பட்ட கருவியால் தாக்கப்பட்டாா். இதில் அவா் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: திகாா் சிறை வளாகத்தில் உள்ள மத்திய சிறை எண் 1-க்குள் மதியம் 12.38 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், பவன் (எ) ராகுல் என்பவரை கையால் செய்யப்பட்ட கத்தி, கையால் செய்யப்பட்ட சுவா மற்றும் ஓடு ஆகியவற்றால் தாக்கினா். தாக்குதல் நடத்தியவா்களில் ஒருவரான விசாரணைக் கைதி அலோக் (எ) விஷால் என்பவரும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, சிறை ஊழியா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா் மற்றும் விரைவு நடவடிக்கை குழுவினா் தலையிட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட கைதிகள் சமாதானப்படுத்தி சண்டையை விலக்கிவிட்டனா். சிறை மருந்தகத்தில் முதன்மை மருத்துவ உதவி அளித்த பிறகு, காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனா். இந்தச் சம்பவம் குறித்து ஹரி நகா் காவல்நிலையத்தில் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT