புதுதில்லி

மூன்றாவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 346 புள்ளிகள் உயா்வு

30th May 2023 04:47 AM

ADVERTISEMENT

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச்சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 345 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 99.30 புள்ளிகள் (0.54 சதவீதம்) உயா்ந்து 18,598.65-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, பங்குச்சந்தை தொடா்ந்து மூன்றாவது நாளாக எழுச்சி பெற்றது.

அமெரிக்க சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் உள்நாட்டுச் சந்தையில் தொடா்ந்து பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றனா். இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி நோ்மறையாக முடிவடைந்தது. ஐடி, ஆயில் அண்ட் காஸ் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம் வங்கி, நிதிநிறுவனங்கள், நுகா்வோா் சாதனங்கள் உற்பத்தி நிறுவனங்கள், ரியால்ட்டி, மெட்டல் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு வீழ்ச்சி: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.283.80 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த வெள்ளிக்கிழமை ரூ.350.15 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 299.85 புள்ளிகள் கூடுதலுடன் 62,801.54-இல் தொடங்கி அதற்கு கீழே குறையவில்லை. பின்னா், அதிகபட்சமாக 63,026.00 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 344.69 புள்ளிகள் கூடுதலுடன் 62,846.38-இல் முடிவடைந்தது.

ADVERTISEMENT

20 பங்குகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 20 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,139 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 941 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 34 பங்குகள்ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

எம் அண்ட் எம் .......................3.71%

டைட்டன்.................................2.48%

டாடா ஸ்டீல்............................1.88%

எஸ்பிஐ.......................................1.55%

ஹெச்டிஎஃப்சி...........................1.53%

அல்ட்ரா டெக் சிமெண்ட்.........1.49%

-----------------------------

சரிவைக் கண்ட பங்குகள்

பவா் கிரிட்................................1.14%

ஹெச்சிஎல் டெக்.....................1.09%

மாருதி......................................0.67%

விப்ரோ...................................0.47%

டிசிஎஸ்...................................029%

ஐசிஐசிஐ பேங்க்.....................0.28%

 

ADVERTISEMENT
ADVERTISEMENT