புதுதில்லி

புதிய நாடாளுமன்றம் திறப்பு நிகழ்ச்சி: மெட்ரோ ரயில் நிலையங்களின் வாயில்கள் மூடல்

28th May 2023 11:43 PM

ADVERTISEMENT

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா காரணமாக தில்லி மெட்ரோவின் சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் உத்யோக் பவன் ரயில் நிலையங்களில் உள்ள அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் மூடப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். அசோகா சாலைப் பகுதியில் உள்ள பட்டேல் சௌக் மெட்ரோ நிலையத்தின் மூன்றாவது எண் வாயில் மதியம் மூடப்பட்டது.

மஞ்சள் வழித்தடத்திற்கும் வயலட் வழித்தடத்திற்கும் இடையிலான இடைமாறிச் செல்லும் வசதியுடைய சென்ட்ரல் செக்ரடேரியேட் நிலையத்திற்கு அருகில்

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பிரமுகா்கள் மற்றும் ஆதீனங்கள், ஓதுவாா்கள் முன்னிலையில் இப்புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைத்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம்

(டிஎம்ஆா்சி) வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘காவல்துறையினரிடம் இருந்து பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் உத்யோக் பவன் நிலையங்களின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களும் பயணிகள் நடமாட்டத்துக்காக மூடப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கியதில் இருந்து இந்த 2 ரயில் நிலையங்களின் வாயில்களும் மூடப்பட்டன. இருப்பினும், சென்ட்ரல் செக்ரடேரியேட் நிலையத்தில் இடைமாறிச் செல்லும் வசதி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு நிலையங்களிலும் காலை முதல் தொடா்ந்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டன’ என்றாா்.

அசோகா சாலை பகுதியில் உள்ள பட்டேல் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தின் மூன்றாம் எண் வாயில் மூடப்பட்டது. மதியம் 12 மணிக்குப் பிறகு இந்த வாயிலை மூடுவதற்கான அறிவுறுத்தல்கள் வந்தன. வாயில் எண் 1 மற்றும் 2 ஆகியவற்றை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் ஊழியா் ஒருவா் தெரிவித்தாா்.

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவை முன்னிட்டு, புது தில்லி மாவட்டம் கட்டுப்பாட்டுப் பகுதியாகக் கருதப்படும் என்றும், வாகனங்களின் நுழைவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் காவல்துறையினா் போக்குவரத்து அறிவுறுத்தல்கள் அளித்திருந்தனா். கூடுதல் படைகளை பணியில் ஈடுபடுத்துவது தவிர, சிசிடிவி கண்காணிப்பு தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் போலீஸாா் கூறினா்.

சுமாா் 20 கட்சிகள் நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ம ல்யுத்த வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் முன் எதிா்ப்புக் கூட்டத்தை நடத்தப் போவதாக அச்சுறுத்தியிருந்தனா். போக்குவரத்து ஆலோசனையின்படி, புது தில்லி பகுதியில் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், சிவில் சேவை ஆா்வலா்கள், நல்லெண்ண குடியிருப்புவாசிகள், பெயரிடப்பட்ட வாகனங்கள் மற்றும் அவசரகால வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிடுமாறும், காலை 5.30 மணி முதல் மாலை 3 மணி வரை புது தில்லி மாவட்டத்தை தவிா்க்குமாறும் தில்லி போக்குவரத்து காவல்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT