புதுதில்லி

துவாரகாவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:அரசுப் பள்ளி ஆசிரியா் மீது வழக்குப் பதிவு

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

தென் மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக அரசுப் பள்ளி ஆசிரியருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை மேலும் கூறியதாவது:

இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை, சிறுமி தனது பெற்றோருடன் துவாரகா தெற்கு காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துபூா்வமாக புகாா் அளித்தாா்.

அதில், தாம் துவாரகாவில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவி என்றும், தனது பள்ளியின் ஆசிரியா் அமித் தனது முதுகு மற்றும் தோளில் தகாத முறையில் தொட்டதாகவும் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 354ஏ (பாலியல் துன்புறுத்தலுக்கான தண்டனை) மற்றும் பிரிவு 10 (மோசமான பாலியல் வன்கொடுமைக்கான தண்டனை) மற்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தச் சிறுமிக்கு தேவையான மன நல ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

குற்றம் சாட்டப்பட்டவா் மீது வெள்ளிக்கிழமை இதேபோன்ற மற்றொரு புகாா் பெறப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT