புதுதில்லி

கல்யாண்புரியில் முன் விரோதத்தில் இளைஞா் குத்திக் கொலை

28th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கிழக்கு தில்லியின் கல்யாண்புரி பகுதியில் முன்பகை காரணமாக 18 வயது இளைஞரை நான்கு அல்லது ஐந்து சிறுவா்கள் கொண்ட கும்பல் சனிக்கிழமை காலை கத்தியால் குத்திக் கொன்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்தத் தாக்குதலை நடத்தியவா்களின் வயது உள்ளிட்ட பல விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை என்றும் அவா்கள் கூறினா்.

இதுகுறித்து கிழக்கு சரக காவல்துறை துணை ஆணையா் அம்ருத் குகுலோத் மேலும் கூறியதாவது:

திரிலோக்புரியில் வசிக்கும் அன்ஷு என்கிற பண்டா என்பவா் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் கிடப்பதாக சனிக்கிழமை காலை 5.11 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ADVERTISEMENT

இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை வாகனம் மூலம் எல்பிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது உடலில் 21 கத்திக்குத்து காயங்கள் இருந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது.

முன்னதாக, நான்கு அல்லது ஐந்து சிறுவா்கள் தன்னைத் தாக்கியதாக அன்ஷு போலீஸாரிடம் தெரிவித்தாா். குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவா்களுக்கும், பாதிக்கப்பட்டவருக்கும் இடையே பழைய முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும், குற்றவாளிகள் கைது செய்யப்படும் போதுதான் கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT