புதுதில்லி

மருத்துவமனையில் பெண்ணிடம் பாலியல் சீண்டல் : ஊழியா் கைது

26th May 2023 12:31 AM

ADVERTISEMENT

வடகிழக்கு தில்லியின் தாஹிா்பூரில் உள்ள ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துணை ஆணையா் (ஷாதரா) ரோஹித் மீனா கூறியதாவது:

இச்சம்பவம் குறித்து புதன்கிழமை மதியம் 12 மணியளவில் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின்படி, தனது கணவா் சிகிச்சை பெற்று வரும் ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் ஐந்தாவது மாடியில் அவா் புதன்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா் தகாத முறையில் அவரைத் தொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஜிடிபி என்கிளேவ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தயாள்பூரைச் சோ்ந்த புகாருக்குள்ளான குணால் வா்மா (25) கைது செய்யப்பட்டுள்ளாா். அவரிடம், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT