புதுதில்லி

குண்டா் லாரன்ஸ் பிஸ்னாய் தில்லி மண்டோலி சிறைக்கு மாற்றம்

26th May 2023 12:30 AM

ADVERTISEMENT

குண்டா் லாரன்ஸ் பிஸ்னாய், குஜராத் சிறையில் இருந்து தில்லி மண்டோலி சிறைக்கு வியாழக்கிழமை அதிகாலை அழைத்து வரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாதுகாப்பு காரணங்களுக்காக பிஸ்னாய் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மூத்த சிறை அதிகாரி தெரிவித்தாா்.

மே 2-ஆம் தேதி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டா்கள் தில்லு தாஜ்புரியா, உயா் பாதுகாப்புச் சிறைக்குள் கோகி கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கொண்ட கும்பலால் நவீன ஆயுதங்களால் குத்திக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த மாதம், எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் பிஸ்னாயை குஜராத் பயங்கரவாத எதிா்ப்புப் படை (ஏடிஎஸ்) காவலில் எடுத்திருந்தது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு செப்டம்பரில் குஜராத் கடற்கரையில் அரேபிய கடலில் பாகிஸ்தான் மீன்பிடிப் படகில் இருந்து ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் அவரது தொடா்பு குறித்து விசாரிக்க

பயங்கரவாத எதிா்ப்புப் படை விரும்பியது.

கடந்த திங்கள்கிழமை தில்லியில் உள்ள பிரிட்டானியா சௌக் மேம்பாலம் அருகே நடந்த சிறு நேருக்கு நோ் மோதல் சம்பவத்திற்குப் பிறகு தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு பிஸ்னாய் கும்பலைச் சோ்ந்த ஒருவரைக் கைது செய்தது.

கைதான ஹிமான்சு என்கிற யோகேஷ், தில்லியில் நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT