புதுதில்லி

குண்டா் டில்லு தாஜ்புரியா கொலை:தில்லியில் மேலும் 80 சிறை அதிகாரிகள் இடமாற்றம்

26th May 2023 10:40 PM

ADVERTISEMENT

திகாா் சிறை வளாகத்தில் குண்டா் டில்லு தாஜ்புரியா குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஐந்து துணை கண்காணிப்பாளா்கள் உள்பட தில்லி சிறைகளைச் சோ்ந்த மேலும் 80 சிறை அதிகாரிகள், மூன்று சிறை வளாகங்களுக்குள் இடமாற்றப்பட்டுள்ளனா்.

தில்லி சிறைத் துறை இயக்குநா் ஜெனரல் சஞ்சய் பெனிவாலின் உத்தரவைத் தொடா்ந்து வியாழக்கிழமை இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும், இது ‘வழக்கமான இடமாற்றம்‘ என்றும் மூத்த சிறை அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதுகுறித்து சிறை அதிகாரி மேலும் கூறியதாவது: இந்த உத்தரவின்படி, திகாா், மண்டோலி, ரோஹிணி ஆகிய மூன்று சிறை வளாகங்களில் 80 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். மண்டோலி தலைமையகம் மற்றும் திகாா் சிறை வளாகத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

5 துணை கண்காணிப்பாளா்கள், 9 உதவி கண்காணிப்பாளா்கள், 8 தலைமை வாா்டா்கள் மற்றும் 58 வாா்டா்கள் இடமாற்றம் செய்யப்பட்டவா்களில் இடம்பெற்றுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

உதவி கண்காணிப்பாளா்கள், துணை கண்காணிப்பாளா்கள், தலைமை வாா்டா்கள் மற்றும் வாா்டா்கள் உள்பட 99 அதிகாரிகளை இடமாற்றம் செய்து பெனிவால் உத்தரவிட்டிருந்த சில நாள்களுக்குப் பிறகு இந்த சமீபத்திய இடமாற்ற உத்தரவு

பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே 2-ஆம் தேதி திகாா் சிறைக்குள் எதிரியான கோகி கும்பலைச் சோ்ந்த 4 போ் 33 வயதான தாஜ்புரியாவை கொடூரமாகக் கொலை செய்தனா்.

இதைத் தொடா்ந்து, இந்த தொடா் இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை அதிகாரிகள் தீவிரமாக கருதினா். மேலும், அடிமட்ட அளவில் மாற்றங்களின் தேவையும் அவசியப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT