புதுதில்லி

திகாா் சிறையில் கைதி தூக்கிட்டுத் தற்கொலை

24th May 2023 02:31 AM

ADVERTISEMENT

திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 வயது கைதி ஒருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:மாளவியா நகா் காவல் நிலையத்தில் பதிவான கொள்ளை வழக்கில் தண்டிக்கப்பட்டிருந்த ஜாவீத் (26) என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு திகாா் சிறையின் எண் 8/9-இல் உள்ள மத்திய சிறையின் பொதுக் கழிப்பறையில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் நீதித் துறை விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT