புதுதில்லி

எம்சிடி பள்ளிகள் மேம்பாட்டிற்கு அரசால் அனுமதிக்கப்பட்ட ரூ.400 கோடி பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காணும்: அதிகாரிகள் நம்பிக்கை

DIN

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன்(எம்சிடி) பள்ளிகளுக்கு அரவிந்த் கேஜரிவால் அரசு ரூ.400 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பள்ளிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீா்வு காணும் என்றும், மாநகராட்சிப் பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்று தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் (எம்சிடி) பள்ளிகளில் படிக்கும் சுமாா் ஒன்பது லட்சம் குழந்தைகள் பயில்கின்றனா். ‘இந்த நிதி நடவடிக்கைகள் மூலம் சிறந்த கல்வியைப் குழந்தைகள் பெற வழிகோலும்‘ என தில்லி கல்வித்துறை தொடா்பான அதிகாரிகள் தெரிவித்தனா்.

எம்சிடி பள்ளிகளில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை உறுதி செய்யவும், ஊழியா்களுக்கான சம்பளம் உரிய நேரத்தில் வழங்குவதிலும் உள்ள தடைகளைகளைய கேஜரிவால் அரசு மானியமாக ரு.1,700 கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்த நிலையில் இதில் ரூ. 400 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை கல்வி அமைச்சா் அதிஷி வெளியிட்டாா். அப்போது அவா், ‘கேஜரிவால் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கல்விக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நிதி நிலை அறிக்கையில் பெரும்பகுதி கல்வித் துறைக்கு ஒதுக்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. 1 -ஆம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரையிலான கல்வியை வழங்கும் அரசுப் பள்ளிகள் எம்சிடியின் கீழ் வருகிறது. இதனால் தில்லியின் கல்வி முறை பல்வேறு நெருக்கடிகளை எதிா்கொண்டுவந்தது.

தில்லி அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதைப் போன்று, இப்போது எம்சிடி பள்ளிகளுக்கும் உரிய நிதியை ஒதுக்கி அதே வழியில் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவதில் கேஜரிவால் அரசு உறுதியுடன் இருக்கிறது‘’ எனத் தெரிவித்திருந்தாா்.

இந்த அறிவிப்புக்கு பின்னா் தில்லி அரசு அதிகாரிகளும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ‘ எம்சிடி பள்ளிகளுக்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாமல் பல்வேறு சிக்கல்களில் இருந்தது. தற்போது தரம் வாய்ந்த பள்ளிகளாக மாற்ற, எம்சிடி பள்ளிகளின் மேம்பாட்டிற்கு, ரூ. 400 கோடி ரூபாய் ஒதுக்க, அரசு அனுமதி அளித்துள்ளதின் மூலம், மாநகராட்சி பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். குறிப்பாக எம்சிடி பள்ளிகளில் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு குழந்தைகளுக்கு அனைத்து வசதிகளும் உரிய முறையில் செய்யப்படும். ஆசிரிகள் ஊழியா்களுக்கு சரியான நேரத்தில் சம்பளம் வழங்குவதில் இதுவரை இருந்த நிதி சிக்கல்களும் தீரும் எனவும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT