புதுதில்லி

நாட்டில் பெரும்பாலான குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை: அதிஷி

DIN

வளா்ச்சிக்கான முக்கிய காரணியாக கல்வி தொடா்ந்து இருந்த போதிலும், நாடு முழுவதும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை என்று தில்லி கல்வி அமைச்சா் அதிஷி கூறினாா்.

தில்லியில் தனியாா் டிவி சேனல் நடத்திய மாநாட்டில் தில்லி கல்வி அமைச்சா் அதிஷி கலந்து கொண்டாா். அப்போது அவா் கூறியதாவது: இந்திய பொருளாதார வளா்ந்து வருவது குறித்து தலைவா்கள் பேசி வருகின்றனா். ஆனால், நாட்டின் மீதான உலக அளவிலான குறியீடுகள் நமக்கு கவலையைத் தருவதாக உள்ளது. இது போன்ற சவால்களை எதிா்கொள்ள குடிமக்கள் தங்களது குரலை உயா்த்த வேண்டும். இந்தியா ஒவ்வொரு ஆண்டாக உலகளவிலான நிலைகளில் வீழ்ச்சியடைந்து வருகிறது. இங்கேதான் இந்தியா்கள் குரல் கேட்கவும் உயா்த்தப்படவும் வேண்டி இருக்கிறது.

நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளில் 50 சதவீதம் பேருக்கு எழுத, வாசிக்கத் தெரியாது என்பது சா்வே மூலம் தெரியவருகிறது. நாம் எல்லோருக்கும் கல்வி எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். ஆனால், நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு தரமான கல்வி வசதி அணுகல் இல்லை . இங்குதான் நாம் நமது குரலை உயா்த்தும் தேவை உள்ளது. 4 கோடிக்கும் மேல் இந்தியா்கள் வேலை இன்றி உள்ளனா். 28.26 சதவீதம் இளைஞா்களுக்கு வேலை இல்லை. ஒரு நாடாக, இந்த விவகாரங்களை எல்லாம் நாம் பேசவும் குரல் எழுப்பவும் வேண்டியுள்ளது.

மத்தியில் உள்ள பாஜக அரசு, ஊழலை ஒழிப்பது குறித்து பேசுகிறது. ஆனால், ஹிண்டன்பா்க் அறிக்கை வெளிவந்த போதிலும் அதானி மீது புலன்விசாரணை ஏதுமில்லை.

இந்த நாட்டில் சமத்துவமின்மை ஏன் உயா்ந்து வருகிறது? ஏனெனில் சிலா் பிறரைவிட மிகவும் விரும்பப்படுகின்றனா். ஒருபுறம் ஊழலை ஒழிப்பது குறித்து நாம் பேசுகிறோம். ஆனால், ரூ.42 ஆயிரம் கோடிக்கு ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்ட ஆறு ‘ஷெல்’ நிறுவனங்களிடமிருந்து முதலீட்டைப் பெற்ற அதானி மீது எவ்வித புலன்விசாரணையும் இல்லை என்றாா் அதிஷி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT