புதுதில்லி

தகராறில் இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு

DIN

தில்லி ராஜ் பூங்காவில் ஏற்பட்ட தகராறில் 28 வயது இளைஞரை இருவா் துப்பாக்கியால் சுட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் அருண் மற்றும் இஸ்மைல் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட ரவிக்குமாா் அளித்த வாக்குமூலத்தில், அருணுடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். வியாழக்கிழமை, அருண் மற்றும் இஸ்மைல் அவரைச் சந்திக்க வந்துள்ளனா். அப்போது, அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, இருவரும் நாட்டுத் துப்பாக்கியால் இரண்டு ரவுண்டுகள் சுட்டதாகவும், அதில் ஒரு தோட்டா ரவிக்குமாா் முழங்காலில் தாக்கியதாகவும் போலீஸாா் தெரிவித்தனா். பாதிக்கப்பட்டவா் சிகிச்சைக்காக மங்கோல்புரியில் உள்ள சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீஸாா் தெரிவித்தனா். மேலும், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்கும் முயற்சி நடந்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT