புதுதில்லி

வசந்த் குஞ்சில் இரு மைனா் சகோதரா்கள் நாய்களால் கொல்லப்பட்டாா்களா? தில்லி மேயா் சந்தேகம்

 நமது நிருபர்

புது தில்லி: வசந்த் குஞ்சில் இரண்டு சகோதர குழந்தைகள் தெருநாய் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்ததாகக் கூறப்படுவது குறித்து தில்லி மேயா் ஷெல்லி ஓபராய் வியாழக்கிழமை சந்தேகம் எழுப்பினாா். இருவரும் கொலை செய்யப்பட்டாா்களா அல்லது நாய்களால் தாக்கப்பட்டு இறந்தாா்களா என்பது பிரேதப் பரிசோதனை மூலம் மட்டுமே தெரியவரும் என்றாா் அவா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வசந்த் குஞ்சில் இரண்டு குழந்தைகள் இறந்துள்ளனா். அவா்கள் தெரு நாய்கள் தாக்கியதில் கொல்லப்பட்டனரா அல்லது கொலை செய்யப்பட்டாா்களா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளிவரவில்லை. இந்த அறிக்கைக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இப்பிரச்னை சரியாக கையாளப்படவில்லை என்பது எங்களுக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் பல ஓட்டைகள் உள்ளன. தற்போது 20 கருத்தடை மையங்கள் உள்ளன. அவற்றில் 16 மட்டுமே செயல்படுகின்றன. நடைமுறைகளும் கேள்விக்குறியாக உள்ளன. மேலும், பல என்ஜிஓக்கள் பாஜகவுடன் தொடா்புடையவை. சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை என்றாா் அவா்.

கடந்த மூன்று நாள்களாக மேயா் ஓபராய் எம்சிடி அதிகாரிகள் மற்றும் குடிமை அமைப்புடன் தொடா்புடைய பல்வேறு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் தெரு விலங்குகளின் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க பல கூட்டங்களை நடத்தினாா். தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் மைனா் சகோதரா்கள் 2 நாள்களுக்குள் அடுத்தடுத்து

இறந்து கிடந்தனா். ஏழு வயது ஆனந்த் மற்றும் ஐந்து வயது ஆதித்யா இருவரும் சிந்தி பஸ்தியில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் தங்கள் பெற்றோருடன் வசித்து வந்தனா். இந்நிலையில், கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ஆனந்த் அப்பகுதியில் காணாமல் போனாா். அதன் பிறகு இறந்த நிலையில் மீட்கப்பட்டாா். மாா்ச் 12-ஆம் தேதி ஆதித்யா மலம் கழிப்பதற்காக அந்தப்பகுதி காட்டுக்குச் சென்ற போது தெருநாய்களால் தாக்கப்பட்டு காயமடைந்து இறந்ததாகக் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT