புதுதில்லி

சிசோடியா மீது பொய் வழக்குகள் போட பிரதமா் திட்டம்: முதல்வா் கேஜரிவால் குற்றச்ச்சாட்டு

DIN


புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மனீஷ் சிசோடியோ மீது பல பொய் வழக்குகளை போட பிரதமா் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிரிவால் வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். மேலும், அவரை நீண்ட காலம் சிறையில் அடைக்க வேண்டும் என்றும் அவா் நினைக்கிறாா் என்றாா்.

தில்லி அரசின் கருத்துப் பிரிவு (எஃப்பியு) தொடா்பாக சிசோடியா மற்றும் பிறருக்கு எதிராக சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்ததை அடுத்து கேஜரிவால் இதைத் தெரிவித்துள்ளாா்.

‘மனீஷ் சிசோடியா மீது பல பொய் வழக்குகளைப் போட்டு, அவரை நீண்ட காலம் காவலில் வைப்பதே பிரதமரின் திட்டம். இது நாட்டுக்கு வருத்தம்’ என்று கேஜரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளாா்.

தில்லி தேசியத் தலைநகா் பிரதேசத்தின் (ஜிஎன்சிடிடி) அதிகார வரம்பிற்கு உள்பட்ட பல்வேறு துறைகள், தன்னாட்சி அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடா்புடைய தகவல்களையும், செயல்படக்கூடிய கருத்துகளையும் சேகரிக்க 2015-ஆம் ஆண்டில் கருத்துப் பிரிவை அமைக்க ஆம் ஆத்மி முன்மொழிந்தது என்று சி.பி.ஐ.தெரிவித்தது. இந்தப் பிரிவு 2016-ல் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் ரகசிய சேவை செலவினங்களுக்காக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிதமான சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

குணசீலம் பிரசன்ன வேங்கடாஜலபதி கோயிலில் தெப்ப உற்சவம்

ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் இறங்கி கஜேந்திர மோட்சம் அளித்த நம்பெருமாள்

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: 89 தொகுதிகளில் பிரசாரம் இன்று நிறைவு

SCROLL FOR NEXT