லோதி வளாகத்தில் உள்ள தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளியில் திறந்தவெளி அரைவட்டக் கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் டிடிஇஏ செயலா் ராஜு, பொருளாளா் சிவம், ஏழு பள்ளி இணைச் செயலா்கள் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியை சாந்தா கிருஷ்ணமூா்த்தி, ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான சந்தோஷ், லோதி வளாகம் பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் ஈஸ்வரி, மந்திா்மாா்க் பள்ளியின் முதல்வா் பொறுப்பு வகிக்கும் ஜெயஸ்ரீ பிரசாத், ஏழு பள்ளி ஆசிரியா்கள் முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவா் வைத்திய நாதன், செயலா் சுகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்தக் கலையரங்கம் 525 இருக்கைகள் கொண்டதாக இருக்கும். ஒப்பனை அறைகள், முக்கிய விருந்தாளிகளுக்கான அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.