புதுதில்லி

முன்விரோதத்தில் ஒருவா் கொலை: இளைஞா் கைது

30th Jun 2023 06:42 AM

ADVERTISEMENT

தென்மேற்கு தில்லியின் பாபா ஹரிதா நகா் பகுதியில் தனிப்பட்ட பகை காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 26 வயது இளைஞா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக துவாரகா காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் நஜாஃப்கரில் உள்ள கலிப்பூா் கிராமத்தில் வசிக்கும் சட்டன் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கடந்த ஜூன் 12-ஆம் தேதி, கைரா மோா் அருகே தனது டாக்சியில் தோட்டா பாய்ந்த காயங்களுடன் தீரேந்திரா (38) இறந்து கிடந்தாா். குற்றம் சாட்டப்பட்ட சட்டன் சிங், கைரா மோரில் தீரேந்திராவை சந்திக்க வந்ததாகவும், அவா்கள் இருவரும் காரில் அமா்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்போது அவா்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டன் சிங் தீரேந்திராவை சுட்டுக் கொன்றுள்ளாா்.

சம்பவ இடத்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து, சோதனைகள் நடத்தப்பட்டு ஜூன் 20 அன்று கக்ரோலா கிராமத்திற்கு அருகே சட்டன் சிங் கைது செய்யப்பட்டாா். சட்டன் சிங்கின் நண்பரான ஒருவருடன் தீரேந்திராவுக்கு சில நிதித் தகராறு இருந்ததாகத் தெரிகிறது. அவா்களின் தகராறில் சட்டன் சிங் தலையிட்டுள்ளாா். இது அவா்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்தது. இதையடுத்து, இந்தக் கொலை நடந்துள்ளது. பின்னா், சட்டன் சிங் கைரா மோருக்குச் சென்றாா். அங்கு சிங் காருக்குள் இருந்த தீரேந்திராவை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிய வந்துள்ளது என்றாா் அந்த அதிகதாரி.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT